ஆங்கில படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கிறார் சமந்தா
2021-11-28@ 01:20:25

சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, பல புதிய படங்களிலும், வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், முதல்முறையாக அவர் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கிறார். இதை பிலிப் ஜான் இயக்குகிறார். 2004ல் டை மெரி என்.முராரி எழுதிய ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் ஒரு படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். இதில் அனு என்ற இருபாலின சர்ச்சைக்குரிய தமிழ் பெண் வேடத்தில் சமந்தா நடிக்கிறார். பெப்டா விருது பெற்றுள்ள பிலிப் ஜான், உலகம் முழுவதும் பிரபலமான ‘டவுன்டன் அபே’ என்ற டி.வி தொடரை இயக்கியவர். அவருடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, 2009ல் ‘இ மாய சேஷவ்’ என்ற படத்துக்காக ஆடிஷனில் கலந்துகொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதற்றத்தை இப்படத்தின் ஆடிஷனின்போது சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை