திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் வாலிபருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை: கேரள நீதிமன்றம் அதிரடி
2021-11-28@ 01:17:49

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து அவரை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு, நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ குமார் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில், இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். பின்னர், அவரை திருமணம் செய்ய சைஷூ குமார் மறுத்துள்ளார்.இது தொடர்பாக ஆரியநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஷைஜூ குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நெடுமாங்காடு அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷைஜூ குமாருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Tags:
Marriage flirting teenager 15 years rigorous imprisonment திருமணம் உல்லாசம் வாலிபருக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனைமேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி.... 2,158 பேர் குணமடைந்தனர்!!
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!