மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி நேரில் ஆஜராக சம்மன்
2021-11-28@ 01:15:56

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு விசாரணைக்கு டிசம்பர் 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கடந்த 2006ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில், ரூ.600 கோடி வரை முதலீடு செய்வதற்கு மட்டுமே ஒன்றிய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், முதலீட்டுக்கு அனுமதி பெற்று கொடுக்க ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவிகள் செய்து, அதற்கு கைமாறாக பல கோடி ரூபாய் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 2 துறைகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.
இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாக்பால் தலைமயிலான அமர்வில், இந்த வழக்கில் நேற்று குற்றப்பதிவு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரை அடுத்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
Tags:
Maxis Company Abuse Case P. Chidambaram Karthi Summoned as Presenter மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் கார்த்தி ஆஜராக சம்மன்மேலும் செய்திகள்
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
பிரதமர் மோடி பேச்சு அடுத்த 10 ஆண்டில் 6ஜி சேவை
ஒரே பாலின திருமண அங்கீகார விவகாரம் ஒன்றிய அரசின் பதில் மனுவில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள்: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்
5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
நிலக்கரி ஊழலில் தொடர்பு மம்தாவின் மருமகனிடம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!