உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சத்யன் - மனிகா
2021-11-28@ 01:07:20

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் - மனிகா பத்ரா இணை காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கனாக் ஜா (அமெரிக்கா) - மான்யூ வாங் (சீனா) இணையுடன் மோதிய சத்யன் - மனிகா ஜோடி 15-17, 10-12 என்ற கணக்கில் முதல் 2 செட்களை இழந்து பின்தங்கினாலும், பிறகு அதிரடியாக விளையாடி அடுத்த 3 செட்களையும் 12-10, 11-6, 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவின் அசந்தா சரத் கமல் - அர்ச்சனா காமத் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்சின் இம்மானுவேல் லெபெஸ்ஸன் - ஜியா நன் யூவன் இணையிடம் 4-11, 8-11, 5-11 என நேர் செட்களில் போராடி தோற்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரியின் டோரா - ஜார்ஜினா ஜோடியுடன் மோதிய மனிகா - அர்ச்சனா இணை 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Tags:
World Championship Table Tennis Quarterfinal Sathyan - Manika உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் காலிறுதி சத்யன் - மனிகாமேலும் செய்திகள்
பைனலுக்கு எந்த ராயல்? ராஜஸ்தான் -பெங்களூர் மோதல்: இன்று 2வது தகுதிச் சுற்று
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி: அறிமுக வீராங்கனை லியோலியா வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4ல் இந்தியா
சில்லி பாய்ன்ட்...
சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்
மகளிர் சேலஞ்ச் கிரிக்கெட்: வாழ்வா, சாவா போட்டியில் டிரையல் பிளாசர்ஸ்-வெலோசிட்டி இன்று மோதல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!