கோவையில் 3 யானைகள் சாவு ரயில் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு
2021-11-28@ 00:50:58

கோவை: கோவை நவக்கரை மாவுத்தம்பதி வனப்பகுதி அருகே ரயில் பாதையை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 3 யானைகள் கடக்க முயன்றன. அப்போது மங்களூரில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற ரயில் யானைகள் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற 25 வயதான பெண் யானை, பின்னால் வந்த 18 வயது மக்னா யானை, 6 வயது குட்டி யானை இறந்தன. இது தொடர்பாக கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ரயிலை இயக்கிய இன்ஜின் டிரைவர்களான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சுபேர் (54), திருச்சூர் அவினிசேரி பகுதியை சேர்ந்த அகில் (31) ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி வழக்குப்பதிந்தனர். இவர்களிடம் வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஜின் டிரைவர்கள் 2 பேரும் கூறும்போது, ‘‘நாங்கள் ரயிலை இயக்கியபோது வௌிச்சம் குறைவாக இருந்தது. மிகவும் இருட்டான, மேடு பள்ளமான பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. கருப்பாக உருவம் தென்பட்டது. 100 மீட்டர் தூரம் முன்பே நாங்கள் பிரேக் பிடித்தோம். ஆனால் ரயில் நிற்காமல் சென்று முதலில் வந்த பெண் யானை மீது மோதியது. பின்னர் வந்த 2 யானைகள் மீது ரயிலின் பக்க பகுதி மோதியது. பெண் யானை இன்ஜின் மீது நேருக்கு நேராக மோதிவிட்டது. அந்த யானை ரயில் பாதையிலேயே விழுந்துவிட்டது. மற்ற 2 யானைகளும் பள்ளத்தில் உருண்டு விழுந்தன’’ என்றனர்.
பாலக்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இன்ஜினில் இருந்த மைக்ரோ சிப்பை கைப்பற்ற சென்ற தமிழக வனத்துறையினர் 6 பேரை ரயில்வே ஊழியர்கள் சிறைபிடித்தனர். டிரைவர்களை விடுவிக்கவேண்டும். அப்போதுதான் 6 பேரையும் விடுவிப்போம் எனக்கூறி விட்டனர். இது தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். யானை வயிற்றில் 4 மாத கரு: யானைகளின் சடலம் அதே இடத்தில் டாக்டர் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இறந்த பெண் யானையின் வயிற்றில் 4 மாத கரு இருந்தது. பெண் யானையின் தலை இன்ஜின் மீது மோதியது. இதில் யானையின் தலை எலும்புகள், மூளை சேதமாகியிருந்தது. பின்னர், யானைகளின் உடல்கள் அதே இடத்தில் பொக்லைன் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
Tags:
Coimbatore 3 elephants death train drivers 2 persons case கோவை 3 யானைகள் சாவு ரயில் டிரைவர்கள் 2 பேர் வழக்குமேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!