தொம்பரம்பேடு கிராமத்தில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா
2021-11-28@ 00:37:24

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீமகா கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பைரவர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டி கலச ஸ்பான நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள், பின்னர் 64 கலச பைரவ ஆராதனை, 64 பைரவ ஹோமம் பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 7 மணிக்கு பெருமாள் கோயிலிலிருந்து ஆபரணப்பெட்டியில் வெள்ளி கவசம் எடுத்துக்கொண்டு, திருக்குடை ஏந்தி, பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அன்று 8 மணி அளவில் 64 கலச புறப்பாடு, கலச அபிஷேகம், பைரவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சிறப்பு தீபாராதனையும், 11 மணிக்கு உற்சவருக்கு திருக்குடை சாற்றி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பைரவ பீஜாசரவ ஹோமம், பின்னர் மகா பூர்ணாஹூதி, நவ பைரவ கலச புறப்பாடு அஷ்டபைரவர், ஆதி பைரவருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம் மற்றும் சிறப்பு திரவிய அபிஷேகம் சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:
Thombarambedu Village Mahakala Byravar Jayanti Festival தொம்பரம்பேடு கிராம மகா கால பைரவர் ஜெயந்தி விழாமேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்