இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தா?
2021-11-27@ 17:59:20

பாக்பத்: இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று பாக்பத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அவரிடம் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்தும் தொடர் ரத்தாகுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளிக்கையில், “தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது.
ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்குப் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து, கட்டுப்பாடுகள் விதித்தால், இந்திய அணி அங்கு செல்வதிலும் சிக்கல் நேரிடும்.
ஒமைக்ரான் வைரஸ் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியான பின்புதான், வரும் நாட்களில் இந்திய அணியின் பயணம் ரத்தாகுமா அல்லது தொடர் நடக்குமா என்பது தெரியவரும் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
பைனலுக்கு எந்த ராயல்? ராஜஸ்தான் -பெங்களூர் மோதல்: இன்று 2வது தகுதிச் சுற்று
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி: அறிமுக வீராங்கனை லியோலியா வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4ல் இந்தியா
சில்லி பாய்ன்ட்...
சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்
மகளிர் சேலஞ்ச் கிரிக்கெட்: வாழ்வா, சாவா போட்டியில் டிரையல் பிளாசர்ஸ்-வெலோசிட்டி இன்று மோதல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!