முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்: 5 விக்கெட்களை வீழ்த்தி அக்ஸர் படேல் அசத்தல்
2021-11-27@ 17:50:54

கான்பூர்: கான்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் கில் 52, ஐடேஜா 50, அஸ்வின் 38, கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
மேலும் செய்திகள்
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் புது சாம்பியன் கிடைக்கலாம்...: சோம்தேவ் கணிப்பு
இங்கிலாந்து அணியில் மீண்டும் பிராடு, ஆண்டர்சன்
20 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் லக்னோ அணி 210 ரன்கள் குவிப்பு: டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தல்
ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி
19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி
பிளே ஆஃப் சுற்றுக்கு மல்லுக்கட்டு கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!