சென்னை பட்டாளம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
2021-11-27@ 14:24:51

சென்னை: சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பட்டாளம் பகுதியில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நேற்று சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், 2 நாட்களாக விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி மழைநீர் தேங்காதவாறும், தேங்கக்கூடிய மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, சென்னையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மாநகராட்சி எவ்வாறான பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!