புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரதமருக்கு டெல்லி முதல்வர் வலியுறுத்தல்
2021-11-27@ 13:00:07

டெல்லி: புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என டெல்லி முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் (B.1.1.529) தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வைரஸ்களைவிட அபாயகரமானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.
இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது. புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களை, இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகள்
பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!