காரைக்குடி அருகே தரைபாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
2021-11-27@ 11:12:38

* போக்குவரத்துக்கு தடை விதிப்பு
காரைக்குடி : காரைக்குடி அருகே தரைபாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ககரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் இருந்து காளையார்கோவில் செல்லும் சாலையில் சறுகணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
தஞ்சை சாயல்குடி செல்லும் முக்கிய சாலையான இப்பகுதியில் தரைப்பாலத்திற்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நபார்டு கடன் உதவியில் 2020ம் ஆண்டு ரூ.10 கோடியே 34 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இதற்காக தரைப்பாலத்தின் அருகே தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
மேம்பாலம் அமைக்கும் பணி இந்த ஆண்டு நவம்பருடன் முடிந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை பணிகள் முடிவடையாமல் ஆமைவேகத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக சறுகணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் அதிகஅளவில் தண்ணீர் செல்கிறது.
இதனால் காளையார்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பாகனேரி வழியாக 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குணாளன் கூறுகையில், ‘‘கல்லலில் இருந்து காளையார்கோவில் செல்வதற்கு பிரதான சாலை இதுதான். மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை முடிக்காமல் உள்ளனர்.
பாலம் வேலை நடப்பதாகவே தெரியவில்லை. ஆமைவேக பணியால் இன்னும் பாதி வேலையை கூட முடிக்காமல் உள்ளனர். தற்போது பெய்த மழையால் போக்குவரத்து தடைபட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். அருகே உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!