எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டு தொடர நானே காரணம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி
2021-11-27@ 00:04:23

கோவை: எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டு தொடர நானே காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அதிமுக அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, விருப்ப மனுக்களை பெற்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நான் துணை நின்றேன். கடந்த 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர நானே காரணம். இதனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் என பலரையும் விசாரணை என்ற பெயரில் தினமும் போலீஸ் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள்.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். கோவையில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.
மேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!