மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு
2021-11-26@ 00:37:27

சென்னை: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அமைச்சர் மெய்யநாதன் நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் அறிவிப்புகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்து துரிதப்படுத்தி நிறைவேற்ற வழிமுறைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தலைவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுப்பினர் செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மற்ற நடவடிக்கைகளையும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் குறிப்பாக நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது, தொழில் வளாகங்களில் அதிக பசுமை போர்வை ஏற்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை முறையாக செயல்படுத்துவது மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை வழங்கினார். இதுதவிர, வாரியத்தின் ஏழு மண்டல அலுவலகங்களில் உள்ள இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் காணொலி காட்சிகள் மூலம் அங்கு உள்ள முக்கிய பிரச்னைகளையும் விவாதித்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!