இந்தோனேஷியா ஓபன் காலிறுதியில் சிந்து
2021-11-26@ 00:04:50

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டி நடந்து வருகிறது. அங்கு நேற்று நடந்த 2வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து(26வயது, 4வது ரேங்க்), ஜெர்மனி வீராங்கனை யுவோன் லீ(23வயது, 11வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முன்னணி வீராங்கனையான சிந்து அதிரடியாக விளையாடி 37 நிமிடங்களில் 21-12, 21-18 என நேர் செட்களில் யுவோனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் காலிறுதியில் கொரியா வீராங்கனை சிம் யுஜின்(22வயது, 54வது ரேங்க்) உடன் மோத உள்ளார். அதேபோல் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை 21-15, 19-21, 23-21 என்ற புள்ளி கணக்கில் கொரியாவின் காங் மி்ஹூயூக், சியோ செவூன்ஜி இணையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
மேலும் செய்திகள்
சன்ரைசர்ஸ் நிதான ஆட்டம் பஞ்சாப் கிங்சுக்கு 158 ரன் இலக்கு
தெ.ஆப்ரிக்கா, இங்கி.க்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு
சில்லி பாய்ன்ட்...
இன்று முதல் ஜகர்தாவில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடக்கம்
கடைசி போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி; கேப்டன் ரோஹித்சர்மா பேட்டி
கொல்கத்தாவில் நாளை மறுதினம் முதல் குவாலிபயர்; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்