SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைந்தது கொரோனா தொற்று!: சென்னை ரயில்வே கோட்டத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை மீண்டும் ரூ.10-ஆக மாற்றம்..!!

2021-11-25@ 16:51:52

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்தது. மேலும் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மீண்டும் பழைய கட்டணம் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆனது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காலத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்