சென்னை அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின்அலி; ஐபிஎல் அணிகள் தக்க வைக்க போகும் வீரர்கள் யார், யார்? லக்னோ அணி கேப்டனாகிறார் கே.எல்.ராகுல்
2021-11-25@ 16:40:28

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடர் சென்னையில் வரும் ஏப்.2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அணிகள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் போட்டிகள் எண்ணிக்கையும் 60ல் இருந்து 74ஆக அதிகரிக்கிறது. ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிகள் 4 வீரர்களை தக்க வைக்கலாம். 3 இந்திய வீரர், ஒரு வெளிநாட்டு வீரர், அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். தக்க வைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வரும் 30ம்தேதி மதியம் 12 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்அணி கேப்டன் டோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி, டூபிளசிஸ், சாம்கரன் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கும் என தெரிகிறது. இதில் மொயின் அலிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக ரெய்னாவை சென்னை கழற்றி விட்டுள்ளது. இதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் ரிஷப்பன்ட், பிரித்வி ஷா, அக்சர்பட்டேல், அன்ரிச் நார்ட்ஜேவையும், மும்பை இந்தியன்ஸ் ரோகித்சர்மா, பும்ரா, பொல்லார்ட், இஷான்கிஷனையும், கொல்கத்தா சுனில்நரேன், ரஸ்சல், வெங்கடேஷ் அய்யர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரையும் தக்க வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரு அணி விராட் கோஹ்லி, மேக்ஸ்வெல், படிக்கல், சாஹல் அல்லது ஜாம்பாவையும், ராஜஸ்தான் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரையும், ஐதராபாத் வில்லியம்சன், ரஷித்கானையும் தக்கவைக்கலாம். பஞ்சாப் அணி மயங்க் அகர்வால், ரவி பிஷ்னோய் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை தக்கவைக்கலாம். பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல், அந்த அணியில் இருந்து விலகி புதிதாக இணைய உள்ள லக்னோ அணியை வழி நடத்தும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணிகள் தக்க வைக்கும் 4 வீரர்களுக்கும் மொத்த ஏலத்தொகை ரூ.90 கோடியில் இருந்து 42 கோடி கழிக்கப்படும். தக்க வைக்கப்படும் முதல் வீரருக்கு ரூ.16, 2வது வீரருக்கு ரூ.12, 3வது ரூ.8, 4வது ரூ.6 கோடி என கழிக்கப்படும். 3 பேரை தக்க வைத்தால் ரூ.33 கோடியும், 2 பேரை தக்க வைத்தால் ரூ.24 கோடியும், ஒருவரை மட்டும் தக்க வைத்தால் ரூ.14 கோடியும் கழிக்கப்படும்.
மேலும் செய்திகள்
பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர்: தங்கம் வென்ற சரத் கமல் பேட்டி
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!
பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா
தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!