SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட் நியூஸ்: அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி..!!

2021-11-25@ 11:02:35

ரஷ்யா: கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் செயல் திறன் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தயாரிப்பு நிறுவனமாக சீரம் நிறுவனம் இருக்கும் என்றும் இந்திய தடுப்பூசி திட்டத்தில் ஸ்புட்னிக் லைட் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதக்கவும் அவர் கூறினார். ஸ்புட்னிக் லைட் என்பது ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V -யின் பாகம்-1 ஆகும். இது இந்தியாவின் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்