உலகில் கொரோனாவால் 25.96 கோடி பேர் பாதிப்பு :அமெரிக்காவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!!
2021-11-25@ 07:48:52

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.96 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 91 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,02,563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் 48,967,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 38,781,230 பேர் மீண்டுள்ளனர். 9,388,337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 1,543 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 798,192 பேராக உயர்ந்துள்ளது.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
Tags:
கொரோனா வைரஸ்மேலும் செய்திகள்
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல்
காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..750 கைதிகள் தப்பியோட்டம்..!!
இந்தியாவின் கடும் எதிர்ப்பு, தடைகளை மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகை: 750 கிமீ நோட்டமிடும் என்பதால் உஷார்நிலை
விண்வெளியில் சுற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் தலையை பதம் பார்க்கும்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆபத்து
டிவிட்டர் வழக்கு செலவுக்காக ரூ.55 ஆயிரம் கோடி பங்குகள் விற்பனை: எலான் மஸ்க் அறிவிப்பு
தைவானை மிரட்ட நடந்த சீனாவின் போர் பயிற்சி நிறைவு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!