கேரளாவில் லாட்டரி வியாபாரிக்கு ரூ5 கோடி பம்பர் பரிசு: மகன் ஊர் திரும்பும் வரை கப்சிப்
2021-11-25@ 03:45:21

திருவனந்தபுரம்: கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் ரூ5 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இதற்கான குலுக்கல் கடந்த 21ம் ேததி நடந்தது. முதல் பரிசு ஆர்.ஏ.591801 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி எர்ணாகுளம் மாவட்டம், கூட்டாட்டுகுளம் பகுதியை சேர்ந்த யாக்கோப் குரியன், கடையில் விற்பனையானது தெரியவந்தது. ஆனால், டிக்கெட்டை வாங்கியது யார்? என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தான் அந்த ரூ5 கோடி பரிசு பெற்றது யாக்கோப் குரியன் என்பது தெரிந்தது.
இது குறித்து யாக்கோப் குரியன் கூறியதாவது: அந்த டிக்கெட்டை என்னுடைய மகனிடம் கொடுத்து வைத்திருந்தேன். அவன் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை சென்றிருந்தான். எனவே, ஊர் திரும்பும் வரை விவரத்தை வெளியே கூறாமல் இருந்தேன். நேற்று மகன் ஊருக்கு வந்தவுடன், ரூ.5 கோடியை முதலீடு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர்: குடியரசு தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!
இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
தொடரும் அவலம்!: டெல்லியில் பெண்களுக்கு எதிராக 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு.. ப.சிதம்பரம் கடும் கண்டனம்..!!
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!