நடிகை கத்ரினா கைப் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் அமைச்சர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு
2021-11-25@ 03:18:18

ராஜஸ்தான்: பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப் கன்னத்துடன் சாலைகளை ஒப்பிட்டுப் பேசிய ராஜஸ்தான் அமைச்சரின் வீடியோ வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தபோது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
அமைச்சரான பிறகு தனது தொகுதிக்கு முதல்முறையாக சென்ற ராஜேந்திர குடா, பாவோன்க் கிராமத்தில் கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் பேசினார். அப்போது அவர்கள், தரமான சாலைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர குடா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஒருவரிடம், ‘எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரினா கைப் கன்னங்கள் போல் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் அமைச்சர் நடிகையின் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசலாமா என்று பல்வேறு தரப்பினர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.: அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை
ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது...அமைச்சர் சக்கரபாணி உரை
இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு
நுபுர் சர்மா மீதான கண்டன விவகாரம் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!