ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்!!
2021-11-24@ 12:44:41

டெல்லி : இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாஸஸ் மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு உலகையே உலுக்கியது. இதில் ஆண்டிராய்ட் மொபைல்கள் மட்டுமின்றி, ஆப்பிள் மொபைல் பயனாளிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், என்எஸ்ஓ நிறுவனம் மீது காலிபோர்னியா நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஸ்பைவேர் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற புதிய விவரங்களை தாக்கல் செய்து உள்ளதாகவும் அதி நவீன கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகளின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் பயனாளிகள் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்எஸ்ஓ நிறுவனத்தின் மென்பொருட்களை முழுமையாக தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான ஐபோன்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இது போன்ற சைபர் தாக்குதலை மிகுந்த அக்கறையுடன் எதிர்கொண்டு பாதுகாப்பு மற்றும் தனி உரிமை கொள்கைகளை பலப்படுத்த உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
பெகாஸஸ் மென்பொருள்மேலும் செய்திகள்
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்று: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல்
காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி..750 கைதிகள் தப்பியோட்டம்..!!
இந்தியாவின் கடும் எதிர்ப்பு, தடைகளை மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகை: 750 கிமீ நோட்டமிடும் என்பதால் உஷார்நிலை
விண்வெளியில் சுற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் தலையை பதம் பார்க்கும்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆபத்து
டிவிட்டர் வழக்கு செலவுக்காக ரூ.55 ஆயிரம் கோடி பங்குகள் விற்பனை: எலான் மஸ்க் அறிவிப்பு
தைவானை மிரட்ட நடந்த சீனாவின் போர் பயிற்சி நிறைவு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!