பல்கேரியாவில் பேருந்து விபத்து: 45 பேர் பலி
2021-11-24@ 00:15:48

சோபியா: பல்கேரியாவின் சோபியா நகரில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு திடீரென பேருந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் ஸ்டீபன் யானேவ் பார்வையிட்டார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். பேருந்து வடக்கு மெசிடோனியாவில் பதிவு எண்ணுடன் உள்ளது. பேருந்தில் வந்த அனைவரும் அங்கிருந்து பல்கேரியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!