காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கீர்த்தி ஆசாத், அசோக் தன்வார் திரிணாமுல் காங்.கில் சேர்ந்தனர்
2021-11-24@ 00:15:43

புதுடெல்லி: டெல்லி காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் கீர்த்தி ஆசாத். இவர் 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்தார். பாஜ எம்பி.யாக இருந்த அவர், பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு எம்பி.யானார். கடந்த 2014ம் ஆண்டு கூட பா.ஜ வேட்பாளராக களம் இறங்கினார். அதன்பின், அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சித்ததால், 2015ல் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, 2018ல் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், அவர் நேற்று டெல்லி சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
இதே போல், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமாக கருதப்பட்ட அசோக் தன்வாரும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இவர் 2009ல் சிர்சா தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், அரியானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். 2019 அக்டோபர் மாதம் காங்கிரசில் இருந்து வெளியேறிய அசோக் தன்வார், கடந்த பிப்ரவரியில், ‘அப்னா பாரத் மோர்ச்சா’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். தற்போது, இவரும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். இதே போல், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முன்னாள் ஆலோசகரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளருமான பவன் வர்மாவும் திரிணாமுல்லில் இணைந்தார். கீர்த்தி ஆசாத் கூறுகையில், ‘‘மக்களை பிரித்தாளும் அரசியலை பாஜ செய்கிறது. இன்று நமது நாட்டிற்கு மம்தா போன்ற தலைமை தேவை. ’ என்றார்.
Tags:
Congress senior leaders Keerthi Azad Ashok Tanwar Trinamool Congress joined காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கீர்த்தி ஆசாத் அசோக் தன்வார் திரிணாமுல் காங் சேர்ந்தனர்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
திரிபாதி அதிரடியில் சன்ரைசர்ஸ் ரன் குவிப்பு
ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு
விசிக முகாம் கூட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!