ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் பிரீபெய்டு கட்டணங்கள் அதிகரிப்பு
2021-11-24@ 00:15:42

மும்பை: பாரதி ஏர்டெல்லை தொடர்ந்து, வோடபோன் ஐடியா நிறுவனமும் பிரீபெய்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம், பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தி நேற்று முன்தினம் அறிவித்தது. இது, வரும் 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை தொடர்ந்து, வோடபோன் நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி 28 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.99 ஆகவும், 28 நாட்களுக்கான அளவற்ற அழைப்பு, 2ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.149ல் இருந்து ரூ.179 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல், 28 நாட்களுக்கான தினமும் ஒரு ஜிபி மற்றும் அழைப்புகள் பேக்கேஜ் ரூ.219ல் இருந்து ரூ.269 ஆகவும், அதிகபட்சம் தினமும் 2 ஜிபிக்கான 28 நாள் பேக்கேஜ் ரூ.299ல் இருந்து ரூ.359 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 56 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் ரூ.399ல் இருந்து ரூ.479 ஆகவும், 84 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் ரூ.379ல் இருந்து ரூ.459 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு பேக்கேஜ்களாக 365 நாட்களுக்கான அளவற்ற அழைப்பு மற்றும் 24ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.1,499ல் இருந்த ரூ.1,799 எனவும், அளவற்ற அழைப்பு மற்றும் தினமும் 1.5 ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.2,399ல் இருந்து ரூ.2,899 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், டேட்டா டாப்-அப் பேக்கேஜ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வுகள் நாளை அமலுக்கு வருவதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!
ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!
இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.73ஆக சரிவு!!
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.6.71 லட்சம் கோடி இழப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்