தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பரவல்
2021-11-24@ 00:02:51

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 741 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1 லட்சத்து 548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 741 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தவகையில், கொரோனாவிற்கு 8,536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 808 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,76,825 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று கோவையில் 119 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் 114 பேருக்கும், செங்கல்பட்டு 57, ஈரோடு 78, திருப்பூர் 57, நாமக்கல் 43 பேருக்கும் தொற்று பதிவாகியது. 30 மாவட்டங்களில் நேற்று உயிரிழப்பு பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்துள்ளது. தூத்துக்குடியில் நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 55 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
நான் ரொம்ப ஒரு ஆவரேஜான ஆக்டர்: படித்தில் நடிப்பது தொடர்பான கேள்வி அண்ணாமலை பதில்
காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!