டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு!
2021-11-23@ 08:09:30

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) அம்மாநில அரசு குறைத்துள்ளது இம்மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைத்தது. கலால் வரியை குறைத்ததோடு மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டுமென்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு முன் வைத்தது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை கணிசமாக குறைத்தன.
அந்த வரிசையில் தற்போது சத்தீஸ்கர் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 2 சதவிகிதமும், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 1 சதவிகிதமும் குறைக்கப்படும் என சத்தீஸ்கர் அரசு அறிவித்தது. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு இதனால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
சத்தீஸ்கர்மேலும் செய்திகள்
பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்
34 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு
ஞானவாபி மசூதி வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது: வாரணாசி நீதிமன்றத்துக்கு கட்டுப்பாடு
செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!