விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது தேர்தல் பயம்: மாவட்ட காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
2021-11-23@ 00:09:37

செங்கல்பட்டு: கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றார் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான சுந்தரமூர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதில், கிட்டத்தட்ட 700க்கும் மேலான விவசாயிகள் போராட்டக் கலத்திலேயே இறந்துள்ளனர்.
இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல், போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கக்கூட நேரம் ஒதுக்காத பிரதமர் நரேந்திர மோடி, திடீரென, முடிவெடுத்து 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றார். இதற்கு ஒரே காரணம், 5 மாநில சட்டமன்ற தேர்தல் பயம் தான் தவிர, விவசாயிகள் மீது உள்ள அக்கறை கிடையாது என்றார். அவருடன், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், முருகன், நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!