உத்திரமேரூர் தொகுதியில் 2 மின்மாற்றிகள் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
2021-11-22@ 00:17:36

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 2 மின்மாற்றிகளை உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை நடேசன் நகரில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய மின்மாற்றி அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். இதனையடுத்து அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை க.சுந்தர் எம்எல்ஏ நேற்று திறந்து வைத்தார். இதேபோன்று ஓரிக்கை அப்பாவு நகரில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியையும் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய காஞ்சிபுரம் வடக்கு செயற்பொறியாளர் சரவணத்தங்கம், இணை செயற்பொறியாளர் இளையராஜா, காஞ்சிபுரம் உதவிப் பொறியாளர் சிவானந்தம், திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், நிர்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
Tags:
Circunscripción de Uttiramerur operación de 2 transformadores MLA உத்திரமேரூர் தொகுதி 2 மின்மாற்றிகள் இயக்கம் எம்எல்ஏமேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை