வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதிமாறன் வலியுறுத்தல்
2021-11-21@ 01:05:35

சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வலியுறுத்தினார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 500 பேருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நிவாரண உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வழங்கினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் தான் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இந்த சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். அதை ரத்து செய்தால் ஒன்றிய அரசை தமிழக மக்கள் மனதார பாராட்டுவார்கள்.
3 வேளாண் சட்டங்கள் நாட்டுக்கு தேவையில்லை. அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதை தான் நாங்கள் சொன்னோம். ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைவரும் அதை தான் சொன்னார். இப்போது ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் தோல்வி, இன்னும் வர உள்ள பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி வரும் என்ற அச்சத்தால் ரத்து செய்துள்ளனர். அதேபோன்று நீட் தேர்வையும் ரத்து செய்தால் உண்மையிலேயே நாங்கள் உங்களை மனதார பாராட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்