இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் இருந்த தையல் ஊசி அகற்றம்-கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
2021-11-20@ 14:11:54

கோவை : கோவையில் இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் இருந்த 7.5 செ.மீ. நீளமான தையல் ஊசியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கோவை தியாகராய நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கழுத்தை பிளேடு மூலம் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த இளம்பெண்ணை மீட்டு கடந்த 2-ம் தேதி கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இ.என்.டி. துறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதலுதவி செய்தனர். தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது, பெண்ணின் கழுத்தில் மூச்சுக்குழாயிலிருந்து கழுத்து தண்டு பகுதியில் மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்தக்குழாய் அருகில் 7.5 செ.மீ. அளவு நீளம் கொண்ட தையல் ஊசி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக இளம்பெண்ணிடம் டாக்டர்கள், கேட்டபோது, முதலில் பிளேடு மூலம் கழுத்தை அறுத்து கொண்டதாகவும், பின்னர் தையல் ஊசி மூலம் குத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் ஆலோசித்து அறுவை சிகிச்சை செய்து தையல் ஊசியை எடுக்க முடிவு செய்தனர்.
பின்னர், நவீன சி ஆர்ம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டு எவ்வித பாதிப்புமின்றி ஊசியை டாக்டர்கள் குழுவினர் துல்லியமாக வெளியே எடுத்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி தற்போது ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். அவருக்கு டாக்டர்கள் கவுன்சலிங் அளித்து வருகின்றனர். மேலும், ஊசியை வெற்றிகரமாக அகற்றிய இ.என்.டி. துறைத்தலைவர் டாக்டர் அலி சுல்தான், டாக்டர்கள் நல்லசிவம், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் வெங்கடேஷ், ஆனந்த சண்முகராஜ், மயக்கவியல் நிபுணர் சத்யா மற்றும் மருத்துவ குழுவினரை மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினர்.
மேலும் செய்திகள்
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!