வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால் ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
2021-11-20@ 12:15:40

சென்னை : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட ஒன்றியக் குழு நாளை தமிழகம் வருகிறது என்று அமைச்சர் .ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்தார். அப்போது பேசிய பேசிய அவர், 'மழை, வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 7 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. இந்தக் குழுவானது 21, 22, 23 ஆகிய தேதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு குழு ஆய்வு செய்கிறது. குமரி ,நெல்லை மாவட்டங்களில் மற்றொரு குழு ஆய்வு செய்கிறது.
நாகை ,தஞ்சை ,திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றொரு குழு ஆய்வு செய்கிறது. 24ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஒன்றியக்குழு ஆலோசிக்கிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 2,629 கோடி வழங்க கோரியுள்ளோம். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக 549 கோடியை விடுவிக்க ஒன்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடரும் கனமழை மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. , ' என்றார்.
Tags:
ராமச்சந்திரன்மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!