SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிபணிந்தது ஆணவம்: தலைவர்கள் கருத்து

2021-11-20@ 00:30:37

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: இந்த நாட்டின் அன்னதாதாக்கள் சத்தியாகிரக போராட்டத்தின் மூலமாக ஆணவத்தை தலைகுனிய வைத்துள்ளனர். அநீதிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது  தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாத விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். அதேபோல், அன்னதாதாக்களின் வாழ்க்கையை காப்பாற்றாதவர்களுக்கு கிடைத்த தோல்வியாகும்.   ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த் விவசாயிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்  செயலாளர் சீதாராம் யெச்சூரி: தனது  சர்வாதிகார நடவடிக்கையால் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகளின் துணிச்சலான  போராட்டத்துக்கு தலை வணங்குகிறேன். போராட்டத்தின் போது உயிர்தியாகம் செய்த  வீரர்கள் எப்போதும் நினைவில் இருப்பார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:  குருநானக் ஜெயந்தி நாளில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. போராட்டத்தின்போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம்  செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாமல் இருக்கும். நாட்டின் விவசாயிகள் தங்களது உயிரை பணயம் வைத்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை இனிவரும் தலைமுறையினரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்:  தேர்தல் தோல்வியால் வந்த பயத்தின் காரணமாக பாஜ இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மன்னிப்பு என்பது இந்த முறை உதவாது. மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டனர். பாஜ.வுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): ஓயாமல் போராடும் ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பாஜ உங்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளை கண்டு வியப்படையவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி; விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். விவசாயிகளின் தியாகத்துக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால், 3 வேளாண் சட்டங்களை திரும்ப  பெறும் ஒன்றிய அரசின் இந்த முடிவு மிகவும் தாமதமானது.

 தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா:  ஒன்றிய அரசு முழு மனதோடு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது என்று யாராவது நம்பினால் அது தவறாகும். இடைத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதால் எரிபொருள் விலைக்குறைப்பு செய்தது.  உத்தரப் பிரதேசம், பஞ்சாப் தேர்தலால் இப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே: சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். இந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். அந்த தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன்.  இது போன்ற சட்டங்களை கொண்டு வருவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்: விவசாயம் நாட்டின் உயிர் நாடியை போன்றது. எனவே, 3 வேளாண் சட்டங்கள் பற்றி விரிவான விவாதம் தேவை என கோரினோம். ஆனால், அது ஏற்கப்படவில்லை. நான் ஒன்றிய விவசாய துறை அமைச்சராக இருந்த போது விவசாயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கை எடுத்தேன். அது பற்றி மாநில அரசுகளி்ன் கருத்தையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்: விவசாயிகளின் போராட்டம் நீண்ட மற்றும் அமைதியான மற்றும் ஜனநாயக சத்தியாகிரக போராட்டமாகும். ஆனால், நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்காக முதலாளித்துவ அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் விவசாயிகளை தீவிரவாதிகள், காலிஸ்தானிகள், நாட்டிற்கு எதிரானவர்கள் என்று அழைத்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா: 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்