மக்கள் கூடும் பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி..! பொது சுகாதாரத்துறை உத்தரவு
2021-11-19@ 20:47:24

சென்னை: மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
*தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.
*மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
*திரையரங்குகள், இதர பொழுது போக்கு இடங்கள், விளையாட்டு மைதாங்களில் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!