வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய தொகை ரூ.6.43 லட்சம் கோடி: உலகளவில் முதலிடம்
2021-11-19@ 00:45:45

வாஷிங்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுப்பி வருகின்றனர். அரபு நாடுகள், அமெரிக்கா, லண்டன் உட்பட வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்களில் இந்தியர்கள் அதிகம். இந்த ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கு 8,700 கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.43 லட்சம் கோடி.
இந்தியாவை தொடர்ந்து, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாடுகளுக்கு டாலர்களில் அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனுப்பிய மொத்த தொகையில், சுமார் 20 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அனுப்பிய தொகை, முந்தைய ஆண்டை விட சுமார் 4.6 சதவீதம் அதிகம். கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவது, மருத்துவ செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆபத்தான விளையாட்டு வேண்டாம்!: சீனாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 4 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு; சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்குவோம்; ஜப்பானில் பிரதமர் மோடி வலியுறுத்தல்; சீனா மீது குற்றச்சாட்டு
ரஷ்யாவின் போர் குறியீடாக இருக்கும் ‘இசட், வி’ எழுத்துகளை பயன்படுத்த தடை; உக்ரைன் நாடாளுமன்றத்தில் புது சட்டம்
இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள்!: இந்திய வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு முக்கியமானது.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்: பெல்ஜியம் அரசு உத்தரவு
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பதவியேற்றதும் டோக்கியோ பறந்த ஆஸி. பிரதமர்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை