ஆப்கானிஸ்தானில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு; 9 பேர் பலி
2021-11-18@ 14:44:21

காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நேற்று நடந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். எந்நேரம் என்ன நடக்குமோ என்ற ஒருவித அச்சத்துடன் வாழ்க்கையை கழிக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் நேற்று 2 வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டது. முதல் குண்டு டாஸ்த் இ பார்ஷி என்ற இடத்தில் வெடித்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி டெபோரா லியோன்ஸ் கூறுகையில், இஸ்லாமிய அரசு-கொராசன், இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் விரிவடைந்து வருவதாகவும், தலிபான்களால் அவற்றை தடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். “இஸ்லாமிய அரசு கொராசன் மாகாணத்தின் விரிவாக்கத்தை தடுக்க தலிபான்களின் இயலாமை முக்கிய எதிர்மறையான வளர்ச்சியாகும்” என்று ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது லியோன்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
அமெரிக்காவின் சுதந்திர தின நிகழ்ச்சி; துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: மர்ம நபரை பிடித்து விசாரணை
“காளி“ கையில் சிகரெட்.. இந்துக் கடவுளை அவமதிக்கும் ஆவணப்படத்தை திரும்பப் பெறுங்கள்... இந்திய தூதரகம் அதிரடி!!
அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்.. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; உடலில் தோட்டா பாய்ந்த 24 பேருக்கு சிகிச்சை!!
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!