இந்தியாவை சீண்டும் சீனா: அருணாச்சல் அருகே ஒரே ஆண்டில் 4 கிராமங்களை அமைத்தது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்..!!
2021-11-18@ 14:05:58

பூட்டான்: இந்தியாவின் அருணாச்சல் மாநிலத்தின் எல்லை அருகே 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியிருப்பது குறித்த செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அருணாச்சலப்பிரதேச மாநில எல்லையில் உள்ள பங்ளா என்ற பகுதி இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமாகும். இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் தற்போது சீனா புதியதாக கிராமங்களை உருவாக்கியுள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த பகுதியை கைப்பற்ற போடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இந்த கிராமங்களை உருவாக்கிறது என்று சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் ஹிண்டல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளனர். சீனா உருவாக்கி இருக்கும் இந்த கிராமங்களில், அருணாச்சலின் எல்லை பகுதியில் உள்ள ஹான் இன சீனர்கள் மற்றும் திபெத் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை குடியேற்ற சீனா திட்டமிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சல் எல்லை அருகே ஒரே ஆண்டில் சீனா 4 கிராமங்களை உருவாக்கியிருப்பது உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் படங்கள் மூலமாக உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக மே 2020ல் இருந்து நவம்பர் 2021 வரை இந்த 4 கிராமங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடம் 2017ம் ஆண்டு டோக்லாம் எல்லை பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூட்டான் படைகளுக்கு அதன் வெளி விவகார கொள்கை அடிப்படையில் இந்தியா பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், பூட்டான் எல்லையில் அருணாச்சல் அருகே சீனா அமைத்திருக்கும் புதிய கட்டுமானம் இந்தியாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு: மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு மூலம் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ராகுல் காந்தி கடும் தாக்கு
சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
ஜார்க்கண்ட்டில் தேர்தல் பேரணி பாக். ஆதரவு கோஷம் 62 பேர் மீது வழக்கு
தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்