இந்தியா, அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலங்கள்: நிலவு சுற்றுப்பாதையில் மோதல் தவிர்ப்பு: விஞ்ஞானிகள் துரித நடவடிக்கை..!
2021-11-18@ 11:59:50

டெல்லி: இந்தியா, அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலங்கள் நிலவு சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மூலம் தவிர்த்துள்ளனர். ரஷிய நாட்டுக்கு சொந்தமான சிறிய வகையிலான பூமியின் தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கானோபஸ்-வி என்ற விண்கலத்தின் மீது இந்தியாவுக்கு சொந்தமான பூமி தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 எப் என்ற 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் சுற்றுப்பாதையில் செயல்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, இந்த செயற்கைகோள்கள் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி 224 மீட்டர் தூர இடைவெளியில் வந்த போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தது. இதனை இருநாட்டு விஞ்ஞானிகளும் சரியான நேரத்தில் கண்டுப்பிடித்து உரிய நடவடிக்கை மூலம் மோதலை தவிர்த்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி காலை 11.15 மணி அளவில் நிலவின் வடதுருவத்திற்கு அருகில் நிலவு சுற்றுப்பாதையில் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-2 விண்கலமும், அமெரிக்காவின் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் (L.R.O) என்ற விண்கலமும் நிலவு சுற்றுப்பாதையில் நிலவின் வட துருவத்தை நெருங்கிச் சென்ற போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தன.
மேலும், இந்த 2 விண்கலத்திற்கு இடையேயான ரேடியல் செயல்பாடு 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதனை கண்டுப்பிடித்த இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து விண்கலங்கள் மிக அருகில் செல்லும் அபாயத்தைத் தணிக்க, மோதல் தவிர்ப்பு சூழ்ச்சி (C.A.M) என்ற விஞ்ஞான பூர்வமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.
இதனையடுத்து, சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைகோள்கள் மற்ற விண்கலங்களோடு அல்லது விண்வெளி குப்பைகளுடன் மோதும் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!