தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறப்பு
2021-11-18@ 00:26:02

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜர் கோயிலில் இன்று மாலை ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மஹா அபிஷேகமும் இரவு தியாகராஜ பெருமான் உள்புறப்பாடு உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கவசமின்றி மூலவரை தரிசனம் செய்ய இயலும்.
நவம்பர் 20ம் தேதி இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை இந்த மூன்று தினங்களில் மட்டுமே கவசமின்றி சுவாமியை முழுமையாக தரிசிக்கலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பிரசாதங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், பக்தர்கள் விரைவு தரிசனத்திற்கு www.hrce.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!