தொடர்மழை, மண்சரிவால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் ஏற்காடு: உள்ளூர் வியாபாரிகள் கவலை
2021-11-17@ 14:49:58

சேலம்: தொடர்மழை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருவது முடங்கியுள்ளது. இதனால் முக்கிய இடங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், அண்ணாபூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக ஏற்காட்டில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் தான் தினசரி அதிகமழை பொழிகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்படுகிறது. குறிப்பாக, கடந்த மாதம் சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் 2 மற்றும் 3வது கொண்டைஊசி வளைவுகளுக்கிடையே, மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் கடந்த 4ம் தேதி குப்பனூர்-ஏற்காடு பாதையில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை சேதமடைந்தது. இருதினங்களுக்கு முன்பு 60 அடி பாலம் அருகே 100 டன் எடையுள்ள ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது. அதனை வெடி வைத்து தகர்த்து அகற்றினர். இதனிடையே, மழை காரணமாக ஏற்காடு மலைப் பாதைகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இந்நேர்வுகளில், சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தியாவசிய நோக்கம் இன்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டிக்கு செல்வதை தற்போதைய சூழலில் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு மற்றும் மழை காரணமாக ஏற்காட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால், ஏற்காட்டிற்கு செல்லும் இரு மலைப்பாதைகள் மற்றும் அங்குள்ள படகு இல்லம், அண்ணாபூங்கா, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இது குறித்து ஏற்காட்டில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், ‘வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், ஏற்காடு களைகட்டி காணப்படும். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவு விபத்துக்களால், மக்கள் ஏற்காடு வர ஆர்வம் காட்டவில்லை. இதனால், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறி சொடி காணப்படுகிறது,’’ என்றனர்.
Tags:
சுற்றுலா பயணிகள்மேலும் செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!