புதுச்சேரியை பெஸ்டாக மாற்றுவோம் என்று கூறி ஒர்ஸ்ட்டாக மாற்றிய பிரதமர் மோடி!: முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்..!!
2021-11-17@ 12:58:44

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்று கூறியதாகவும் ஆனால் தற்போது ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிவருவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சமீபத்தில் திருப்பதியில் நடந்த முதல்வர்கள் மாநாடு புதுச்சேரிக்கு எந்தப் பயனும் இல்லை என்றார். முதலமைச்சர் ஒரு மனு அளித்து கூட்டத்தில் பேசுகிறார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றொரு மனு அளிக்கிறார்; அதில் வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. இதனிடையே இந்த ஆட்சியில் முன்னுக்கு பின் முரணான செயல்பாடுகள் இருக்கின்றன. இதன் மூலம் முதலமைச்சர் ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சரின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருப்பது தெரியவருகிறது. புதுச்சேரி நிர்வாகத்தின் நிதி நிலை மோசமாக உள்ளது என்றும், ஒன்றிய அரசு வழங்கும் திட்டங்களை செயல்படுத்த கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
மாநில உள்துறை அமைச்சர் கூறுவதை முதலமைச்சர் கேட்கவில்லையா? என்பது இந்த ஆட்சியில் புரியாத புதிராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக கொண்டுவருவோம் என்று கூறினார். ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் நிலை தற்போது ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்
34 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு
ஞானவாபி மசூதி வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது: வாரணாசி நீதிமன்றத்துக்கு கட்டுப்பாடு
செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!