SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலிண்டர் விலை ரூ.2,657... ஒரு லிட்டர் பால் ரூ. 250: விலை உயர்வை கண்டித்து இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

2021-11-17@ 10:41:29

கொழும்பு : இலங்கையில் எரிபொருள், உணவுப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் பேரணி நடந்தது.இலங்கை அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி அவர்கள் போராட்டம் நடத்தினர். அரிசி, சர்க்கரை, பால், எரிபொருள், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து அவர்கள் குரல் எழுப்பினர்.

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்ந்து ரூ.2,657க்கு விற்பனை ஆகிறது. அதே போல ஒரு லிட்டர் பால் ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இலங்கையில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்