டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு: பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடல்!!
2021-11-17@ 08:52:38

டெல்லி : தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு காரணமாக அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 10 நாட்களுக்கு மேலாக நச்சு புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு எனப்படும் air quality index பல நாட்களாக மிகவும் மோசமான மற்றும் கடுமையான வரம்பில் உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்று மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி வரை அரசு அலுவலக பணியாளர்கள் 50 பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி அரை அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிரக்குகளை தவிர தேவையற்ற டிரக், லாரிகள் டெல்லி பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல விமானம், ரயில், பேருந்து மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Tags:
டெல்லிமேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா.. 33 பேர் பலி.... 2,158 பேர் குணமடைந்தனர்!!
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!