அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பூண்டி நீர்த்தேக்கத்தில் 7 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
2021-11-17@ 00:08:04

திருவள்ளூர்: அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை 7 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆந்திரம் மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல், நேற்று அதிகாலை வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் நள்ளிரவில் பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 33.80 அடி உயரமும், 2815 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
மேலும், நீர்த்தேக்கத்துக்கான நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, அணையின் பாதுகாப்பு கருதி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுபடி நேற்று 6 ஆயிரம் கன அடியிலிருந்து, வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!