பாமக முன்னாள் நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு: மதுரையில் பரபரப்பு
2021-11-17@ 00:07:58

மதுரை: மதுரை, மேல அனுப்பானடி ராஜமான் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாரிச்செல்வம். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். பாமக முன்னாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளர். நேற்று காலை டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வத்ைத தேடியுள்ளனர். அவர் இல்லாததால், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். இந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சாலையில் நடந்து சென்ற சேகர் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, ``மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் மாரிச்செல்வத்தை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். இதனால், மாரிச்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவோ, தொழில் முன்விரோதம் காரணமாகவோ வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
மபி.யில் உள்ள எஸ்.ஆர்.கே, பல்கலைக் கழகத்தில் தேர்வே எழுதாத மாணவர்களுக்கு போலியாக பட்டம் வழங்கி மோசடி: துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர் கைது
காஷ்மீர் மதுபான கடையில் தாக்குதல்: 5 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல் : சிறுவன் உள்பட 6 பேர் கைது
மாணவி மீதான காதல் மோகத்தால்; கூடுவாஞ்சேரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்: சாலையில் சரமாரி அடிதடி: வீடியோ வைரலால் பரபரப்பு
ரூ.1 கோடி பாக்கி பிரச்னையில் பயங்கரம் கிராமத்துக்கு வரவழைத்து நெல் வியாபாரி கொலை: மற்றொரு வியாபாரி கைது
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!