முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரி நல்லமநாயுடு மாரடைப்பால் காலமானார்..!!
2021-11-16@ 12:40:23

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லமநாயுடு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லமநாயுடு, 1997ல் பள்ளி ஓய்வுக்கு பின்னர் பெரம்பலூரில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இதனிடையே கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து நல்லமநாயுடுவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டம் கும்பிநாயக்கன்பட்டிக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இறந்த நல்லமநாயுடு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து அவரை கைது செய்தவராவார். ஆறே மாதத்திற்குள் ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தார். அதுவே தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்க காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
முதல் நாளே அதிரடி சோதனை; சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!