கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை 20 ரயில்கள் பகுதியாக ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
2021-11-16@ 00:04:54

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடங்களில் செல்லும் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று இயக்கப்பட இருந்த கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் (12634) ரயில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் இடையேயும், சென்னை எழும்பூர் - குருவாயூர் (16127) ரயில் திருநெல்வேலி மற்றும் குருவாயூர் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் (16724) ரயில் கொல்லம் மற்றும் நாகர்கோவில் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தடத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மொத்தம் 20 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்