கோவை மாணவி தற்கொலை போன்று தமிழகத்தில் இனி நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
2021-11-16@ 00:04:41

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, கடந்த 11ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்து சென்ற கடிதத்தின் அடிப்படையில், ஒரு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டும் போதாது. மாணவியின் உயிரிழப்புக்கு பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் நீதி கேட்கிறார்கள். வேலியே பயிரை அழிப்பதற்கு இனி ஒருபோதும் தமிழக பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் இனி தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடைபெற வேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியர் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!