துபாயில் கோலாகலமாக தொடங்கியது சர்வதேச விமான கண்காட்சி!: முதல் நாளில் போயிங், போர் விமானங்கள் மெய் சிலிர்க்கும் சாகசம்..!!
2021-11-15@ 10:23:37

துபாய்: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச வர்த்தக மற்றும் பாதுகாப்பு விமானங்கள் கண்காட்சி துபாயில் கோலாகலமாக தொடங்கியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமானத்துறையை ஊக்குவிக்கும் விதமாக துபாயில் உள்ள அல் மக்டோம் விமான நிலையத்தில் இந்த 5 நாள் விமான கண்காட்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாளில் போயிங் ஜெட் மற்றும் போர் விமானங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சாகச காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
துபாய் சர்வதேச விமான கண்காட்சியில் வணிக ரீதியிலான விமான போக்குவரத்து மற்றும் உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ள 'தி செக்மேட்' என்ற போர் விமானம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் பிரபல எப் - 35 ரக போர் விமானங்களுக்கு போட்டியாக 'தி செக்மேட்' போர் விமானத்தை ரஷ்யா தயாரித்து களத்தில் இறக்கியிருக்கிறது.
போர் விமானங்களில் பொருத்தப்படும் சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் எரிபொருள் செலவினத்தை குறைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன விமான என்ஜின்களை போயிங் நிறுவனம் அரங்கில் காட்சிக்கு வைத்துள்ளது. வரும் வியாழக்கிழமை வரும் நடைபெறவுள்ள துபாய் விமான கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர். முதல் நாளில் பிரேசில் அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 21ம் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா? அமைச்சரவையில் இன்று பரிசீலனை
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இந்தியாவுக்கு இம்ரான் மீண்டும் பாராட்டு மழை
12 நாடுகளில் 92 பேருக்கு பாதிப்பு குரங்கு அம்மை மேலும் பரவும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கூடுதல் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடி; கனடா பிரதமரின் மனைவி ரஷ்யாவிற்குள் நுழைய தடை
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்