நியூயார்க் -டெல்லி இடையே நான்-ஸ்டாப் விமான சேவை: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தொடங்கியது
2021-11-15@ 01:17:29

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பரவும் முன்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே நேரடி ( நான்-ஸ்டாப்) மற்றும் ஒரு இடத்தில் நின்று (ஒன் ஸ்டாப்) செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலும் ஒன்-ஸ்டாப் விமானங்களில் பயணம் செய்வதையே மக்கள் விரும்பினர். இந்நிலையில், கொரோனா பாதிப்புகளுக்குப் பிறகு, ஒன்-ஸ்டாப் விமானங்களில் பயணம் செய்யக்கூடிய மனநிலை, மக்களிடம் மாறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
இதனால், இனிமேல் நான்-ஸ்டாப் விமான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க, அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, நியூயார்க் -டெல்லி இடையே 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது முதல் நான்-ஸ்டாப் விமானத்தை இயக்கி உள்ளது. நியூயார்க்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட இது, நேற்று முன்தினம் இரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், பெங்களூரு- சியாட்டில் இடையிலான நேரடி விமானத்தை அடுத்தாண்டு மார்ச் முதல் தொடங்கவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்