SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ.பன்னீர் செல்வம் பேட்டி எனக்கும் எடப்பாடிக்கும் எந்த பிரச்னையும் இல்லை

2021-11-15@ 01:00:08

சென்னை: எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித பாகுபாடும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில், ஓ.பன்னீர் செல்வம்  மூன்றாவது நாளாக நேற்று, அண்ணாநகர், சத்யாநகர், சூளைமேடு பத்மநாபபுரம், திருக்குமரபுரம், எழும்பூர், துறைமுகம், பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட படகுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அப்போது, ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கனமழை காரணமாக மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளது. தமிழக அரசு இதற்கான இழப்பீட்டை தர வேண்டும். எனக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். பார்ப்பவர்களின் பார்வையில் தான் தவறு உள்ளது.
இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்